பயங்கரமாக மோதிக் கொண்ட வியாபாரிகள்.. பதற வைக்கும் வீடியோ !!
பயங்கரமாக மோதிக் கொண்ட வியாபாரிகள்.. பதற வைக்கும் வீடியோ !!

வியாபாரிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கம்பு, கம்பிகள் யகொண்டு தாக்கிக்கொண்ட வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக வியாபாரிகள் இரு குழுவினர் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இரு குழுவினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் பலர் அங்கு திரண்டதால் மோதல் பெரிதானது.

அப்போது இரு குழுவினரும் சண்டைபோட்ட இடத்தில் கையில் கிடைத்த கம்பு, பிளாஸ்டிக் பைப், குப்பைத் தொட்டிகளை கொண்டு மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். வியாபாரிகள் பலர் கம்பு, கம்பியுடன் பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 arrested by @baghpatpolice over this rather dramatic fight that started between two chaat shop owners over attracting customers to their respective shops ! pic.twitter.com/HZ1A9ZWml2
— Alok Pandey (@alok_pandey) February 22, 2021
newstm.in

