இனி சிக்னல்ல ஹாரன் அடிச்சா... டிராஃபிக் போலீசாரின் அதிரடி!! வைரல் வீடியோ!
இனி சிக்னல்ல ஹாரன் அடிச்சா... டிராஃபிக் போலீசாரின் அதிரடி!! வைரல் வீடியோ!

காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பை போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இனி வாகனங்கள் சிக்னலில் காத்திருக்க நேரும் போது, வாகன ஓட்டிகள் பொறுமை இழந்து, அடிக்கடி காதுகளை செவிடாக்கும் அளவிற்கு ஹாரன் அடிப்பதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனைக் கட்டுவதற்காக மும்பை போக்குவரத்து போலீசார் 'தி பனிஷிங் சிக்னல்' என்கிற பெயரில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
#MumbaiPolice pic.twitter.com/VLT5IZdPe5
— newstm (@newstmlive) February 2, 2020
இந்த புதிய திட்டத்தின் படி டிராபிக் சிக்னல்களுடன், டெசிபல் மீட்டர்கள் எனப்படும் ஒலி அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிக்னலில் காத்திருக்கும் போது, யாராவது ஹாரன் அடித்து, ஹாரன் சப்தம் 85 டெசிபலுக்கு மேல் சென்றால், உடனடியாக சிக்னலில் உள்ள விநாடிகள் தானாகவே அதிகமாகும்.

அதாவது க்ரீன் சிக்னல் வருவதற்கு 15 விநாடிகள் இருக்கும் போது யாராவது ஹாரன் அடித்தால், அவர்கள் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய நேரம் 90 விநாடிகளாக அதிகரித்து விடும். இதனால் சிக்னலில் நிற்கும் போது ஹாரன் அடித்தால், போக்குவரத்தில் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாகும்.

தற்போது இந்த புதிய திட்டத்தால் சிக்னல்களில் யாரும் ஹாரன் அடிப்பதில்லை. மும்பையை அடுத்து, இந்த புதிய நடைமுறை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
newstm.in

