Theme Check

‘ஸ்விகி’ ஊழியரால் போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்!

‘ஸ்விகி’ ஊழியரால் போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்!

‘ஸ்விகி’ ஊழியரால் போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்!
X

ஸ்விகி நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் (38).

இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மோகனசுந்தரம் குடும்பத்தினருடன், சின்னியம்பாளையத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தனர். ஆனால், கொரோனா தொற்று காலத்தில் போதிய வியாபாரம் இல்லாமல் அந்தக் கடை மூடப்பட்டதால், மோகனசுந்தரம் உணவு விநியோக நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று ஹோப்காலேஜ் பகுதி உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, புலியகுளம் சாலை நோக்கி மோகனசுந்தரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பீளமேடு காவல் நிலையம் அருகே சென்றேபோது, அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வேன், அவிநாசி சாலையிலிருந்து பன்மால் சாலையை நோக்கி திரும்பியது. அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது.

Swiggy-employee

இதைப் பார்த்த மோகனசுந்தரம், தனியார் பள்ளி வேனை தடுத்து நிறுத்தி "ஏன் அலட்சியமாக வேனை ஓட்டுகிறீர்கள்" என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது.

பன்மால் சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ், என்ன நடந்தது என விசாரிக்காமல், சம்பவ இடத்துக்கு வந்து, உணவு விநியோக ஊழியர் மோகனசுந்தரத்தின் செல்போனை பிடுங்கி, அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இது குறித்து பேசிய மோகனசுந்தரம், நேற்று அவிநாசி சாலை மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் சாலையை கடக்க முயன்ற ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும் அந்த வாகனத்தை தான் வழிமறைத்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர்,"இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என கேட்டு தன்னை தாக்கியதாக தெரிவித்தார். மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார்.

police

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும்,பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டார். விசாரணையின் இறுதியில் காவலர் சதீஷ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
Share it