Theme Check

சோகம்! முதுபெரும் தொல்லியல் அறிஞர் நாகசாமி காலமானார்!!

சோகம்! முதுபெரும் தொல்லியல் அறிஞர் நாகசாமி காலமானார்!!

சோகம்! முதுபெரும் தொல்லியல் அறிஞர் நாகசாமி காலமானார்!!
X

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி (91) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

இவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக பலரால் அறியப்பட்டவர்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார்.

nagaswamy

1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்.

நாகசாமியின் பணிகளைப் பாராட்டி அவரை அங்கீகரிக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.

சென்னையில் அவர் வசித்து வந்த நிலையில், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it