Theme Check

சோகம்! அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதி 3 பேர் உயிரிழப்பு!!

சோகம்! அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதி 3 பேர் உயிரிழப்பு!!

சோகம்! அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதி 3 பேர் உயிரிழப்பு!!
X

கோவை உப்பிலிபாளையம் அருகே அரசுப்பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

உப்பிலிபாளையம், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசுப்பேருந்து எஸ்4 சௌரிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த ஆட்டோவுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளனாது.

இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி ஆட்டோவில் பயணித்த இசக்கி முத்து(23), கலைவாணன்(23) மற்றம் பிரபாகரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

cbe

ஆட்டோ ஓட்டுநர் கவுதம் பலத்த காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it