Theme Check

சோகம்! சுற்றுலா வந்த நபர் கடல் அலையில் சிக்கி பலி!!

சோகம்! சுற்றுலா வந்த நபர் கடல் அலையில் சிக்கி பலி!!

சோகம்! சுற்றுலா வந்த நபர் கடல் அலையில் சிக்கி பலி!!
X

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இளைஞர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரிவில் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 8 இளைஞர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், கடற்கரையை சுற்றி பார்த்தனர்.

அதில் மனோஜ், கார்த்திக், விநாயக், சிவா ஆகிய நான்கு இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது விநாயக் (26) கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் விநாயக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

pud

இதனையடுத்து இது குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விநாயகத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விநாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it