Theme Check

சோகம்.. 5 சவரன் நகைக்காக 82 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை..!

சோகம்.. 5 சவரன் நகைக்காக 82 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை..!

சோகம்.. 5 சவரன் நகைக்காக 82 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை..!
X

திருச்செந்தூர் அருகே 5 சவரன் நகைக்காக 82 வயது மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த நாகூர் அம்மாள் என்ற அந்த மூதாட்டிக்கு நாள்தோறும் காலை அவரது பேரன் சென்று உணவு கொடுத்து வருவது வழக்கம்.வழக்கம்போல் சென்று பார்த்தபோது, வாயில் ரத்தம் வடிய மூதாட்டி சடலமாகக் கிடந்துள்ளார். அவரது பற்கள் உடைந்து கீழே கிடந்த நிலையில், கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

நாகூர் அம்மாளின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகை மாயமாகி இருந்த நிலையில், கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
Share it