வங்கி அதிகாரியான இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
வங்கி அதிகாரியான இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பேருந்தை முந்திச் செல்ல முயன்று வேகமாக பைக்கில் வந்த இளம்பெண், சறுக்கி கீழே விழுந்த நிலையில், அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரத்தில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிந்து வந்தவர் ரஞ்சனி. இவர் இன்று காலை வழக்கம்போல் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக்கில் பணிக்கு சென்றார். ராமநாதபுரம் - தேவிபட்டிணம் நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சியில் இருந்து வந்த அரசுப் பேருந்தை இடதுபுறமாக முந்தி செல்ல முயன்று, பேருந்தை ஒட்டி வந்த போது, சாலையில் கிடந்த மணலில் சறுக்கி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், பேருந்தின் பின்பக்க சக்கரம் பெண் மீது ஏறி, இறங்கியது. இதில் இளம்பெண் ரஞ்சனி, தலைநசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விபத்து சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கு யார் காரணம் என்றும் விசாரணை நடத்துகின்றனர். இளம்பெண் ஒருவர் விபத்தில் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

