Theme Check

கர்ப்பிணி மனைவிக்கு உதவியாக சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்..!!

கர்ப்பிணி மனைவிக்கு உதவியாக சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்..!!

கர்ப்பிணி மனைவிக்கு உதவியாக சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்..!!
X

கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் உரியகுன்னத் ஷிபு. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனால் மனைவியை சிரமப்படுத்த கூடாது என்பதற்காக உரியகுன்னத் ஷிபு கடந்த சில நாள்களாகவே வீட்டு வேலையையும், சமையல் வேலையும் கவனித்துவந்தார்.

நேற்று வழக்கம்போல் சமையல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரஷர் குக்கர் வெடித்ததில் உரியகுன்னத் ஷிபு பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Next Story
Share it