Theme Check

பெரும்சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. 17 பேர் பலி: 59 பேர் படுகாயம்..!

பெரும்சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. 17 பேர் பலி: 59 பேர் படுகாயம்..!

பெரும்சோகம்.. லாரி மீது பைக் மோதல்.. 17 பேர் பலி: 59 பேர் படுகாயம்..!
X

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா. இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்திற்கு தேவையான வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அபியெட் என்ற பகுதியில் சந்தைப்பகுதியில் லாரி சென்றபோது வேகமாக வந்த பைக் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் தீப்பற்றியுள்ளது. இதனால், லாரியில் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
Ghana Blast: Truck carrying explosives for gold mine .. Motorcycle collision  .. Massive blast kills 17 .. | Ghana Blast: Mining Vehicle Carrying  Explosives Crashes Into Motorcycle In Ghana | pipanews.com
இந்த கோர விபத்தில் சந்தைப் பகுதி முழுவதும் நிலைகுலைந்தது. சக்திவாய்ந்த அதிக அளவிலான வெடிமருந்து வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்; 59 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Next Story
Share it