தொடரும் சோகம்.. ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !!
தொடரும் சோகம்.. ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !!

தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் விரைந்துசென்று பார்த்தப்போது அவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
ஆயுதப்படை காவலர் பெரியசாமி, சிதம்பரம் தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார் .ஆயுதப்படை காவலர் எதற்காக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்தார் எனப்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

கடந்த 7ஆம் தேதி ஆயுதப்படை காவலராக சரவணகுமார் (30) என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணக்குமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல், காவலர் பெரியசாமி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in

