தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் காலமானார் !

தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் காலமானார் !

தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் காலமானார் !
X

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர்.

இந்த வரிசையில் தற்போது பிரபல வடிவேலு படங்களில் நடித்து வந்த காமெடி நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.

kalidoss

ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் இருக்கின்றன. நடிகர் காளிதாஸ், வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய இறுதிச் சடங்க சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்களால் நடத்தப்படுகிறது. காளிதாஸின் உயிரிழப்புக்கு திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it