சோகம்.. வீட்டில் சடலமாக தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகர் !!
சோகம்.. வீட்டில் சடலமாக தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகர் !!

கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா. 54 வயதான இவர் சிறு வயது முதலே சீரியலில் நடித்து வருவதால் அம்மாநில மக்களிடம் பிரபலமானவர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தை கைப்பற்றி உள்ள தம்பனூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சில நிதி பிரச்னைகள் இருந்ததால் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

ரமேஷ் வலியசாலா அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். நேற்று காலை 6.30 மணியளவில் அவரது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன் ரமேஷ் தனது படப்பிடிலிருந்து திரும்பி உள்ளார். ரமேஷ் கடந்த 22 ஆண்டுகளாக சீரியல் துறையில் தீவிரமாக பணியாற்றி உள்ளார். ரமேஷ் அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது நாடக பின்னணயில் இருந்து தொலைக்காட்சி துறைக்கு வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

