Theme Check

விளாத்திகுளம் அருகே நடந்த சோகம்!! வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பிரதாப பலி!!

விளாத்திகுளம் அருகே நடந்த சோகம்!! வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பிரதாப பலி!!

விளாத்திகுளம் அருகே நடந்த சோகம்!! வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பிரதாப பலி!!
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளவாதலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவருக்கு மாரித்தாய் என்ற மனைவியும் ஒரு வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாரித்தாய் வீட்டு வேலைகளை பார்த்து கொண்டு இருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மகாலட்சுமி சிறிது நேரத்தில் திடீரென காணமால் போனதை கண்டு மாரித்தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அதையடுத்து குழந்தையை தேடி பார்த்த போது, அங்குள்ள குளியல் அறையில் இருந்த 20 லிட்டர் வாளியில் குழந்தை தலைக்குப்புற கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டிருக்கிறார்.

மாரித்தாய் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் வந்து குழந்தையை மீட்டு, விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் மாரித்தாயின் மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it