Theme Check

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்..!!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்..!!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்..!!
X

தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடரந்து அறங்கேறி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெல்சன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழ்ந்தார்.

man-hole

இந்நிலையில், சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அக்குடியிருப்பில் உள்ள 15 நீளம், 15 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பள்ளிக்கரணையை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பெரியசாமி(40), தட்சணாமூர்த்தி(38) ஆகியோர் வந்தனர். பின்னர் இருவரும் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி இருவரும் தொட்டியில் மயங்கி விழுந்தனர்.

தகவல் அறிந்து வந்த குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் தொட்டியில் மயங்கி இருந்த இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய தட்சிணாமூர்த்தியை மீட்டு பெருங்குடி உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

dead-body

இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it