Theme Check

செங்கல்பட்டு அருகே சோகம்..!! 5 பேர் உயிரிழப்பு... 10 பேர் கவலைக்கிடம்..!!

செங்கல்பட்டு அருகே சோகம்..!! 5 பேர் உயிரிழப்பு... 10 பேர் கவலைக்கிடம்..!!

செங்கல்பட்டு அருகே சோகம்..!! 5 பேர் உயிரிழப்பு... 10 பேர் கவலைக்கிடம்..!!
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி அந்த சாலையில் வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

accident

இந்த கோர விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காப்பாற்ற கோரி சத்தம் போட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

dead-body

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுறள்ளது.

Next Story
Share it