Theme Check

சென்னை அருகே சோகம்..!! திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!

சென்னை அருகே சோகம்..!! திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!

சென்னை அருகே சோகம்..!! திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!
X

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் முருகன்-அமுதா தம்பதிக்கு மேகலா (22) என்ற மகள் உள்ளார். பி.காம் பட்டதாரியான இவர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லும் வழியில், சாலிகிராமத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரும் யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேகலா மற்றும் யுவராஜ் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நட்பு காதலாக மலர்ந்தது இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மகளின் காதல் விவகாரம் குறித்து மேகலாவின் பெற்றோருக்கு தெரியவர, உடனடியாக வேறு இடத்தில் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தனது காதலர் யுவராஜிடம் தெரிவித்த மேகலாவிடம் உடனே நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என யுவராஜ் கூறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வடபழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

Suicide

இந்த நிலையில் யுவராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று மேகலாவிற்கு திருமணத்திற்கு பிறகுதான் தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிகடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் அடித்ததாக கூறி மேகலா தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

பெற்றோரை எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன், தன்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என வருந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்த மேகலா படுக்கை அறைக்குச் சென்றார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

dead-body

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்களத்தூர் போலீசார் மோகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 8 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it