Theme Check

பெருந்துறை அருகே சோகம்.. நண்பர்களின் உயிரை குடித்தது மின்சாரம்..!

பெருந்துறை அருகே சோகம்.. நண்பர்களின் உயிரை குடித்தது மின்சாரம்..!

பெருந்துறை அருகே சோகம்.. நண்பர்களின் உயிரை குடித்தது மின்சாரம்..!
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் குமார் (31). இவருடைய குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ரஞ்சித்தின் நண்பர்களான தோப்பு பாளையத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி பிரகதீஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்துள்ளனர்.

3 பேரும் வீட்டின் மேல் மாடியில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரகதீஷின் கை எதிர்பாராத விதமாக மின் கம்பிகள் பட்டு மின்சாரம் தாக்கியது.

இதைப்பார்த்த ரஞ்சித்குமார் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக ரஞ்சித்தின் மீதும் மின்சாரம் பாய்ந்து இரண்டு பேரையும் தூக்கி வீசியது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ரஞ்சித் குமார் மனைவி சந்தியா மற்றும் சக்திவேல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it