Theme Check

தஞ்சை அருகே சோகம்.. நின்ற லாரி மீது வந்த கார் மோதல்.. 2 பேர் உடல் நசுங்கி பலி..!

தஞ்சை அருகே சோகம்.. நின்ற லாரி மீது வந்த கார் மோதல்.. 2 பேர் உடல் நசுங்கி பலி..!

தஞ்சை அருகே சோகம்.. நின்ற லாரி மீது வந்த கார் மோதல்.. 2 பேர் உடல் நசுங்கி பலி..!
X

தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் (35) மற்றும் ஜெயராமன் (22). இவர்கள் இருவரும் நேற்று தஞ்சையில் இருந்து காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை விஜய் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, தண்ணீர் பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த கார் முன்னால் நின்ற லாரி மீது படுவேகமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி லாரியின் அடியில் சிக்கி பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில், காரில் இருந்த விஜய் மற்றும் ஜெயராமன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர். இதனை பார்த்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், காரில் சிக்கி இந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .இந்த விபத்து காரணமாக தஞ்சை - திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
Share it