Theme Check

விழுப்புரம் அருகே சோகம்.. குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

விழுப்புரம் அருகே சோகம்.. குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

விழுப்புரம் அருகே சோகம்.. குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
X

மரக்காணம் அருகே, கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, 2 பேத்திகள், பேரன் என 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள்கள் வினோதினி (13), ஷாலினி (10), மகன் கிருஷ்ணன் (8). இவர்கள் மூவரும் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முறையே 7, 5, 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

பள்ளி விடுமுறை என்பதால் 3 பேரும் நேற்று முன்தினம் மரக்காணம் அடுத்த பெருமுக்கலில் உள்ள தனது பாட்டி புஷ்பா (60) வீட்டிற்கு வந்தனர்.

நேற்று மதியம் 1 மணியளவில் புஷ்பா தனது பேத்திகள் மற்றும் பேரனை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க அழைத்துச் சென்றார்.
கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  பலி.!
அங்கு 4 பேரும் வாயில் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சற்று முன்னால் சென்று குளித்த கிருஷ்ணன் நீரில் மூழ்கினார். கிருஷ்ணனைத் தேடி வினோதினியும், ஷாலினியும் குட்டையின் நடு பகுதிக்குச் சென்ற போது அவர்களும் மூழ்கினர்.

செய்வதறியாமல் திகைத்த புஷ்பா கூச்சலிட்டபடி பதற்றத்தில் குட்டையின் நடு பகுதிக்கு சென்றபோது அவரும் மூழ்கினார். புஷ்பாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, குட்டையின் கரையில் உடைகள் மட்டும் இருந்துள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் குட்டையில் மூழ்கிய வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன், புஷ்பா ஆகியோரை சடலமாக மீட்டனர்.

இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it