#BREAKING:- முதல் நாளே சோகம்.. ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்கேஜி மாணவன் பலி..!
#BREAKING:- முதல் நாளே சோகம்.. ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்கேஜி மாணவன் பலி..!

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது ஊத்துப்பாறை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் பலர் பள்ளி செல்வதற்கு வாடகை ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (27-ம் தேதி), தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேரை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று புறப்பட்டுச் சென்றது.
வசவப்புரம் - செய்துங்கநல்லூர் சாலையில், அனவரதநல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஆட்டோவுக்கு அடியில் சிக்கி செல்வ நவீன் (5) என்ற எல்கேஜி படித்து வந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
காயமடைந்த 7 மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எல்கேஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் ஊத்துப்பாறை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

