சோகம்.. விபத்தில் சிக்கியது பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்.. 2 பேர் பலி: 24 பேர் படுகாயம்..!
சோகம்.. விபத்தில் சிக்கியது பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்.. 2 பேர் பலி: 24 பேர் படுகாயம்..!

மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் பால்சன்ட் காவல் நிலையத்துக்குட்பட்ட ஷியோ பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், ஃபல்சூண்டில் உள்ள பனுவோன் கி தானியில் வசிக்கும் ஹசம் கான் (12), கசம் கான் (14) ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் இருந்த 24 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

