சோகம்.. தமிழக சிஆர்பிஎஃப் வீரர் காஷ்மீர் விபத்தில் பலி..!
சோகம்.. தமிழக சிஆர்பிஎஃப் வீரர் காஷ்மீர் விபத்தில் பலி..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எம்.என்.மணி (38). இவர், காஷ்மீரில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மணி உட்பட 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்றனர்.
ஹைடர்போரா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

இறந்த துணை ராணுவ வீரர் மணிக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. துணை ராணுவ வீரர் மணி இறந்த செய்தியைக் கேட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Next Story

