அதிர்ச்சி! பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பலி!!
அதிர்ச்சி! பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பலி!!

கொரோனா தொற்று காரணமாக அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா 2ஆவது அலை மிகத்தீவிரமாக உள்ளது. முதல் அலையின் போது உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது நாள்தோறும் 400க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். வீரியம் மிக்க வைரஸ் என்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி பலியாகி வருகின்றனர். நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகர் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் #வெங்கட் சற்றுமுன் 12.48 am க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்
— T Siva (@TSivaAmma) May 28, 2021
T. சிவா pic.twitter.com/LMDkiFWi8b
அதில், தனது 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சையில் உள்ளார் என்றும் அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வெங்கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக டி.சிவா கூறியுள்ளார். என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் வெங்கட் மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்று டி.சிவா வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
newstm.in

