Theme Check

திருமணத்துக்கு சென்று திரும்பியபோது சோகம்.. எமனாக வந்த லாரி..

திருமணத்துக்கு சென்று திரும்பியபோது சோகம்.. எமனாக வந்த லாரி..

திருமணத்துக்கு சென்று திரும்பியபோது சோகம்.. எமனாக வந்த லாரி..
X

ஆந்திர மாநிலம் திருப்பதி அனந்தபுரம் அருகே, பல்லாரியைச் சேர்ந்த 9 பேர் உரவ கோட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபின் இரவு ஊர் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பல்லாரி பகுதியில் எதிர்திசையில் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நசுங்கி அதில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

கார் மோசமான நிலையில் நசுங்கியதால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்பது சவாலான காரியமாக இருந்தது. எனவே போலீசார் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் காரை உடைத்து உடல்களை மீட்டனர்.

விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள ஆந்திர போலீசார், லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். மரணமடைந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it