சொந்த ஊர் சென்றபோது சோகம்.. திருச்சியை சேர்ந்த 2 பேர் உடல் கருகி பலி..!
சொந்த ஊர் சென்றபோது சோகம்.. திருச்சியை சேர்ந்த 2 பேர் உடல் கருகி பலி..!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்ற 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே இன்று அதிகாலை முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த குமார் மற்றும் வெங்கட வரதன் என்பது தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான லாரியும் தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

