Theme Check

இளநீர் பறிக்க சென்றபோது சோகம்.. மின்சாரம் தாக்கி தந்தை - மகன் பலி..!

இளநீர் பறிக்க சென்றபோது சோகம்.. மின்சாரம் தாக்கி தந்தை - மகன் பலி..!

இளநீர் பறிக்க சென்றபோது சோகம்.. மின்சாரம் தாக்கி தந்தை - மகன் பலி..!
X

திருவனந்தபுரம் கோவளம் அருகே உள்ள புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டன் (65). இவரது மனைவி சரசம்மா (61). அவர்களின் இரண்டாவது மகன் ரெனீன்(35).

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சரசம்மா தனக்கு ஒரு இளநீர் வேண்டும் என கணவனிடம் கேட்டுள்ளார். உடனே அவர் அருகில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக வீட்டின் மாடி மீது ஏறிச் சென்று இரும்பு கொக்கியை பயன்படுத்தி இளநீர் பறிக்க முயற்சி செய்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி மீது இரும்பு கொக்கி மாட்டிக் கொண்டது.அதிக மின் அழுத்தம் இருந்ததால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து புகை வர ஆரம்பித்தது.

அதைக் கண்ட மகன் ரெனீன் தந்தையை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர் உடலில் இருந்தும் புகை வர ஆரம்பித்துள்ளது.

வெளியிலிருந்து அதைக் கவனித்த ஒரு சிலர் ஓடி வந்து பார்த்தபோது, இருவரும் உடல் கருகிய நிலையில் காணப்பட்டனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவர்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவிக்காக இளநீர் பறிக்கச் சென்ற தந்தையும், மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it