லாரி மீது ரயில் மோதி விபத்து.. சுக்கு நூறாக நொறுங்கிய லாரி ..!
லாரி மீது ரயில் மோதி விபத்து.. சுக்கு நூறாக நொறுங்கிய லாரி ..!

மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று இரவு மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனேக்கல் தாலுகா ஆவலஹள்ளி பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் லெவல் கிராசிங் தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியுள்ளது.
தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டதால் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி தண்டவாளத்தில் சிக்கியதாகவும், அந்த நேரத்தில் ரயில் வந்ததால், லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:
Next Story

