Theme Check

இன்று முதல் நாகர்கோவில்-பெங்களூரு இடையே ரயில் சேவை!

இன்று முதல் நாகர்கோவில்-பெங்களூரு இடையே ரயில் சேவை!

இன்று முதல் நாகர்கோவில்-பெங்களூரு இடையே ரயில் சேவை!
X

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ரயில் (வ.எண்.07235) பெங்களூருவில் இருந்து நாளை (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. அதிகாலை 6.10 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது. காலை 8.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், வருகிற 1-ந் தேதி இந்த ரயில் (வ.எண்.07236) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லையும், நள்ளிரவு 11.50 மணிக்கு மதுரை ரயில்நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

இந்த ரயில், பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலுக்கு முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

Tags:
Next Story
Share it