Theme Check

12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை...!!

12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை...!!

12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை...!!
X

மதுரை - போடி இடையிலான மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ம் தொடங்கியது. தொடக்கம் முதலே நிதி சுணக்கம் காரணமாக ஆமை வேகத்தில் பணி நடந்து வந்தது. 2015-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. முதல்கட்டமாக மதுரை-தேனி வரையிலான அகலப்பாதை பணிகள் நிறைவுற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து, மதுரை - தேனி வரை பயணிகள் ரயிலை இயக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.

mdu-theni

இதனைத் தொடர்ந்து, 2 சரக்கு பெட்டிகள், 10 பொதுப்பெட்டிகள் அடங்கிய பயணிகள் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே, மதுரை - தேனி பயணிகள் ரயில் சேவை திட்டத்தை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதன்படி, பயணிகளுக்கான ரயில் சேவை இன்று காலை மதுரையில் இருந்து கிளம்பியுள்ளது. காலை 8.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில், காலை 9.35 மணிக்கு தேனியைச் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

madurai

12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கி உள்ளதால் மதுரை, தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பேருந்தை விட கட்டணம், பயண நேரம் குறைவு என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it