Theme Check

வரும் 18-ம் தேதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு - பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

வரும் 18-ம் தேதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு - பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

வரும் 18-ம் தேதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு - பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!
X

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து, குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

Students

இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து வரும் 18-ம் தேதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

DPI

மேலும், மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story
Share it