தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள்- வைரல் வீடியோ !

தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள்- வைரல் வீடியோ !

தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள்- வைரல் வீடியோ !
X

தீ வைக்கப்பட்டு தண்டவாளங்களில் ரயில்கள் பயணிக்கும் காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தற்போது பனிக்காலம் நிலவி வருவதால் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகள், வீடுகள், மரங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

train

அதேபோல், ரயில் தண்டவாளங்களிலும் பனி உறைந்துள்ளது. தண்டவாளங்களில் பனி உறைவதால் ரயில் சேவையில் காலதாமதம் மற்றும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தொடர்ந்து தண்டவாளங்களில் சிறிய அளவில் தீ வைக்கப்பட்டு அதன் மூலம் பனி உறைவு தடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள தண்டவாளங்களில் தீ எரிந்துகொண்டிருக்கும்போதும் அதில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தீ எரியும் தண்டவாளத்தில் ரயில் இயக்கப்படும் காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.


எனினும் இது வழக்கமான நடைமுறைகள் தான் என்றும், தண்டவாளங்களில் சிறிய அளவில் தீ வைக்கப்பட்டு அதன் மூலம் பனி உறைவு தடுக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it