Theme Check

கோலாகலமாக நடைபெற்ற திருநங்கை - திருநம்பி கல்யாணம்..!!

கோலாகலமாக நடைபெற்ற திருநங்கை - திருநம்பி கல்யாணம்..!!

கோலாகலமாக நடைபெற்ற திருநங்கை - திருநம்பி கல்யாணம்..!!
X

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருநம்பி மனு கார்த்திகா (வயது 31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார்.

இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா எஸ் பிரபா (வயது 31).

இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரி அரங்கத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.

transgender-couple

இதையடுத்து உறவினர்களும், நண்பர்களும் தம்பதியை வாழ்த்தினர். இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முயன்று வருகிறது.

இதற்கான சட்டப் போராட்டத்திற்கு இருவரும் தயாராகி வருகின்றனர். இது தொடர்பில் விரைவில் பொதுநல மனு தாக்கல் செய்வோம் என தம்பதி தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it