Theme Check

முன்பதிவு தொகையை திருப்பி வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முடிவு..!

முன்பதிவு தொகையை திருப்பி வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முடிவு..!

முன்பதிவு தொகையை திருப்பி வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முடிவு..!
X

நாளை முழு ஊரடங்கு என்பதால், பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பித் தர அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாது. இதையடுத்து, நாளை (9ம் தேதி) வெளியூர் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கான தொகையை திருப்பி வழங்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளது.

அடுத்த வாரம் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்பதால், அன்றைய தினத்திற்கு முன்பதிவு செய்ய முடியாதபடி போக்குவரத்து கழக இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Next Story
Share it