பயணிகளே, இன்டர் சிட்டி இனி சென்னை சென்ட்ரல் செல்லாது..!
பயணிகளே, இன்டர் சிட்டி இனி சென்னை சென்ட்ரல் செல்லாது..!

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சென்னை இடையேயான இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி, சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அரக்கோணம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12680) காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, ஏப்ரல் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12679), ஏப்ரல் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு புறப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

