Theme Check

மரம் உரசியதால் ஆத்திரம்.. !மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...!

முருங்கை மரம் வீட்டில் உரைசியதாக ஆத்திரம்.. மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...!

மரம் உரசியதால் ஆத்திரம்.. !மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...!
X

திருவள்ளூர் மாவட்டத்தில் முருங்கை மரத்தின் கிளை வீட்டின் மேல் உரசியதால் சின்ன மாமனாரே மருமகளை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கலைவாணி(27). செந்தில்குமாரின் செந்திலின் சித்தப்பா ராமன் (50) பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். செந்தில்வேலின் குடும்பத்திற்கும் ராமனுக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பல ஆண்டுகளாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ராமன், செந்தில் வீட்டின் முருங்கை மரம் தனது வீட்டில் உரசுவதாக கூறி செந்திலின் வீட்டிற்கு வந்துள்ளார்.

மரம் உரசியதால் ஆத்திரம்.. !மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...!

செந்திலின் மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருந்த நிலையில் குடிபோதையில் இருந்த ராமன் கலைவாணியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து மருமகள் கலைவாணியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலைவாணி அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கலைவாணியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மரம் உரசியதால் ஆத்திரம்.. !மருமகளைக் கொன்ற சின்ன மாமனார்...!

அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வெள்ளவேடு போலீசார் ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருங்கை மர பிரச்னைக்காக சின்ன மாமனாரே மருமகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it