Theme Check

நடுங்கும் வடமாநில மக்கள்.. தண்ணீர் உறைந்துபோகும் அளவுக்கு குளிர்.. ஆரஞ்ச அலர்ட் !

நடுங்கும் வடமாநில மக்கள்.. தண்ணீர் உறைந்துபோகும் அளவுக்கு குளிர்.. ஆரஞ்ச அலர்ட் !

நடுங்கும் வடமாநில மக்கள்.. தண்ணீர் உறைந்துபோகும் அளவுக்கு குளிர்.. ஆரஞ்ச அலர்ட் !
X

குளிர் மற்றும் பனிக் காலம் துவக்கமே தீவிரமாக உள்ளதால், பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் விடியற்காலை கடுமையான குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக குளிர் தொடங்கி நில வாரங்களுக்கு பிறகு தான் அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.

kulir

ஆனால், இந்தாண்டு குளிர் மற்றும் பனிக் காலம் துவக்கமே தீவிரமாக உள்ளதால், பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், பனிமூட்டம் காரணமாக மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டதால் மக்கள் கடுங்குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் மைனசை விட வெப்பநிலை கீழே சென்றுள்ளது. நடுங்க வைக்கும் குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர். சில பகுதிகளில் தண்ணீர் உறைந்துள்ளது. வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

kulir

மேற்கு ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் நேற்று -1.1 டிகிரியாக வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகார், டெல்லி, மேற்கு உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில -1.6 டிகிரி முதல் -3.0 டிகிரி வரை பதிவாகியுள்ளதாகவும் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கடும் குளிர் காற்று வீசும் எனவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானுக்கு, தீவிர குளிர்காற்று வீசும் என்பதற்கான 'ஆரஞ்ச்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் மிதமான குளிர்காற்று வீசும் என்பதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it