நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய திருச்சி மாணவரை அள்ளியது காவல்துறை..!
நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய திருச்சி மாணவரை அள்ளியது காவல்துறை..!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை தினமும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட திருவான்மியூர் போலீசார், அதை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் என்ற மாணவனை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மாணவர் ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

