பயில்வான் ரங்கநாதனுக்கு சிக்கல்... பிரபல பாடகி போலீஸில் புகார்!!
பயில்வான் ரங்கநாதனுக்கு சிக்கல்... பிரபல பாடகி போலீஸில் புகார்!!

தன்னைப்பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திரையுலகில் நடிகர், திரைத்துறை செய்தியாளராக உள்ள பயில்வான் ரங்கநாதன், தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் திரைத்துறை குறித்து யூடியூப் பக்கத்தில் மிகவும் மோசமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் பாடகி சுசித்ரா குறித்து அவர் பேசியது தற்போது அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கடந்த மார்ச் மாதம் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப்பற்றி மிக அவதூறாக, பேசியதாகவும், இதே போன்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்யான செய்திகளை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பேசிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பற்றி அவதூராக பேசிய பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் பாடகி சுசித்ரா கேட்டுக்கொண்டுள்ளார். தொடர் புகார்கள் வருவதால் பயில்வான் ரங்கநாதனை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார் அவர் பேசிய யூடியூப் சேனல்களின் விபரங்களை பெற்று வருகின்றனர்.
newstm.in

