Theme Check

யுகேஜி மாணவனுக்கு சரமாரி பிரம்பு அடி- ஆசிரியை மீது கொந்தளிப்பு

யுகேஜி மாணவனுக்கு சரமாரி பிரம்பு அடி- ஆசிரியை மீது கொந்தளிப்பு

யுகேஜி மாணவனுக்கு சரமாரி பிரம்பு அடி- ஆசிரியை மீது கொந்தளிப்பு
X

வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று UKG பள்ளி மாணவனை பிரம்பால் சரமாரியாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு மாதனூர் பகுதியை சேர்ந்த சதீஷ்- இளவரசி தம்பதியினரின் மகன் சர்வின் என்ற சிறுவன் UKG பயின்று வருகிறார்.

சர்வின் வழக்கம்போல், நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று மானவர் சர்வினை, அவரது பள்ளி ஆசிரியை சத்தியா பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். வழக்கத்தைவிட கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு கை மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவன் சர்வினை கண்ட அவர்களின் பெற்றோர் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

child

உடனடியாக பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் முறையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு பள்ளி ஆசிரியை சத்யாவை பள்ளி இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் பள்ளி ஆசிரியை சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it