என் பெயரில் ட்விட்டர் கணக்கு.. நடிகர் செந்தில் புகார் !!

என் பெயரில் ட்விட்டர் கணக்கு.. நடிகர் செந்தில் புகார் !!

என் பெயரில் ட்விட்டர் கணக்கு.. நடிகர் செந்தில் புகார் !!
X

நகைச்சுவை நடிகர் செந்தில் அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. மாறாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். அமமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகர் செந்தில் வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அதில், நான் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகாலமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஜூன் 12-06-2021 அன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சிலர் நான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும் தமிழக முதல்வர் மீதும், அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள்.

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த ஜுன் 12-06-2021 அன்று எனது போலியான பெயரில் வெளியான ட்விட்டர் பதிவை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. சாதாரண கணக்கே தெரியாது டுவிட்டர் கணக்கை பற்றி நான் எங்கே? என கூறினார். எனது நண்பர்கள் மூலம் எனது பெயரில் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் துவங்கியுள்ளதை அறிந்தேன். டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூட கோரிக்கை வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்படப்பட்டுள்ளது. அதை நான் செய்யவில்லை.

நான் உண்டு எனது வேலை உண்டு என சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்று அடையாளம் தெரியாத சிலர் செய்யும் வேலைகள் மனஉளைச்சலை தருகிறது எனவும் அவர் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it