இந்தியாவுக்கு ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நிதியுதவி !!
இந்தியாவுக்கு ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நிதியுதவி !!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி கூறுகையில், ' இந்த தொகையானது கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
Tags:
Next Story

