Theme Check

இரு குழந்தைகள் கொலை.. தாயும் சோக முடிவு- கடிதத்தில் பகீர் தகவல் !!

இரு குழந்தைகள் கொலை.. தாயும் சோக முடிவு- கடிதத்தில் பகீர் தகவல் !!

இரு குழந்தைகள் கொலை.. தாயும் சோக முடிவு- கடிதத்தில் பகீர் தகவல் !!
X

பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சுகாதாரத் துறையில் பணியாற்றி வருபவர் ஃபர்கான். இவருக்கு சபீனா. ஃபர்கான்- சபீனா தம்பதிக்கு சனா (13), யமீனா (11) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சபீனா தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரமாக சபீனா வீட்டின் கதவை திறக்காததால் உறவினர்கள் சென்று பார்த்தப்போது அவர்கள் மூன்று பேரும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dfs

இந்நிலையில், தற்கொலை செய்துக்கொண்ட சபீனா முன்னதாக எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் என் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. சில நாட்களாக நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். எனது இரண்டு குழந்தைகளும் நான் இறந்த பிறகு தனியாக இருப்பார்கள் ஆகவே அவர்களை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it