முதலமைச்சரின் காரை வழிமறித்த இருவர் - கதிகலங்கிய காவல்துறை
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை விரகனுர் அருகே இரண்டு பேர் முதலமைச்சரின் காரை வழிமறித்து அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். இதையடுத்து பதறிப்போன காவல்துறையினர் இருவரையும் பிடித்தனர்.

மதுரை விமானநிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காரை இரண்டு பேர் வழிமறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை விரகனுர் அருகே இரண்டு பேர் முதலமைச்சரின் காரை வழிமறித்து அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். இதையடுத்து பதறிப்போன காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏழு தமிழர் விடுதலைக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த காந்தி, தமிழ் தேசிய பேரியக்க மதுரை மாவட்ட துணைப் பொறுப்பாளர் கருப்பையா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த மனுவை படித்து பார்த்த போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேரை விடுதலை செய்ய உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in

