Theme Check

பர்கர் சாப்பிடும் போட்டியில் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்ட இருவர்!!

பர்கர் சாப்பிடும் போட்டியில் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்ட இருவர்!!

பர்கர் சாப்பிடும் போட்டியில் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்ட இருவர்!!
X

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இசட்-பர்கர் சார்பில் பர்கர் சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும் ஜூலை 4-ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், 14 பேர் கலந்துகொண்டனர்.போட்டியாளர்கள் முன்பாக ஒரு அட்டைப்பெட்டி நிறைய பர்கர்களும். ஏராளமான தண்ணீர் கேன்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.போட்டி ஆரம்பித்தவுடன் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் முன்வைக்கப்பட்டு இருந்த பர்கர்களை விறுவிறுவென்று சாப்பிட ஆரம்பித்தனர். பலரும் பர்கர்களை விழுங்கினால் போதும் என்று வேகமாக விழுங்கத் தொடங்கினர்.

இதில் கலிபோர்னியாவைச் சேர்ந்த மோலி ஷுய்லர் மற்றும் பென்சில்வேனியாவை சேர்ந்த கில்லர் கென்னடி ஆகியோர் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்டு அசத்தினர்.

இந்த போட்டியில் மோல்லி சைலரும், டான் கில்லர் கென்னடியும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பர்கர் சாப்பிட்டனர். இறுதியில் இருவருமே போட்டி நேரம் முடிந்தபோது 34 பர்கர்கள் சாப்பிட்டதால் இருவருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இதில் டான் கெல்லர் கென்னடியுடன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட மோல்லி சைலர் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it