நடிகை திரிஷாவுக்கு சிறப்பு கௌரவம் அளித்த ஐக்கிய அரபு அமீரக அரசு !!

நடிகை திரிஷாவுக்கு சிறப்பு கௌரவம் அளித்த ஐக்கிய அரபு அமீரக அரசு !!

நடிகை திரிஷாவுக்கு சிறப்பு கௌரவம் அளித்த ஐக்கிய அரபு அமீரக அரசு !!
X

நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் தற்போது சில காலமாக நல்ல கதைகொண்ட குறைவான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். எனினும் திரிஷா பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன.

trisha

அந்த வகையில் தற்போது திரிஷாவை ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் இத்தகைய கௌரவ கோல்டன் விசாக்களை வழங்குகிறது.

trisha

இந்நிலையில், தமிழ் திரைப்பட நடிகை திரிஷா கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

trisha

ஐக்கிய அரபு எமிரேட் நாடு கடந்த சில நாட்களாக இந்திய திரையுலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மோகன்லால், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரெளட்டாலா, பாடகி சித்ரா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

newstm.in

Tags:
Next Story
Share it