அமைச்சர் ஆவார் உதயநிதி.. அடித்துச் சொல்கிறார் சீமான்..!
அமைச்சர் ஆவார் உதயநிதி.. அடித்துச் சொல்கிறார் சீமான்..!

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கொரோனா காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் சீமான் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரிய வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் என் மீது வழக்கு போடப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்தார்.
ஆனால், எங்களை மட்டும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்..?
உதயநிதி ஸ்டாலின் மீதும் கொரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது. தற்போது அவர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்வதற்காக இதனைக் கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்தாண்டுகள் அமைச்சராக மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் அதன் பிறகு நான் பேசுகிறேன். பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி.. அமைச்சராக்க எதிர்ப்பு இல்லை என அரங்கேற்றும் நாடகம்” என தெரிவித்தார்.

