மொபைல் ஆஃப் மூலம் ரயில் டிக்கெட்! இன்று முதல் நடைமுறை!
மொபைல் ஆஃப் மூலம் ரயில் டிக்கெட்! இன்று முதல் நடைமுறை!

சென்னை ரயில்வே கோட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் காலை முதல் இரவு வரை பயணிகள் அதில் பயணம் செய்கின்றனர். இதனால் டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் எடுக்க கூட்ட நெரிசல் ஏற்படுவதை காணமுடிகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு யூ.டி.எஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியும் நிறுத்தப்பட்டது.

தற்போது வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், மீண்டும் ‘யூ.டி.எஸ்’ செயலியின் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது. இன்று முதல் பயணிகள் கவுன்டர்களுக்கு செல்லாமல் ‘யூ.டி.எஸ்’ செயலி மூலம் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிக்கெட்கள் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் உள்ள பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. இந்த செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு மணி நேரத்துக்குள், பயணிகள் தங்களது பயணத்தை தொடங்க வேண்டும் எனவும் ரயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in

