இந்த பல்கலை.யில் சேராதீங்க.. மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை..!
இந்த பல்கலை.யில் சேராதீங்க.. மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் மாணவர்கள் அங்கு சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் தொலைநிலை படிப்பை நடத்த பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளைக் கொண்டு உயர்கல்வியில் சேர முடியாது.
அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் அதில் சேர வேண்டாம் என்று யு.ஜி.சி அறிவித்துள்ளது.
அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு செல்லத்தக்கது அல்ல. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 - 2015 வரை மட்டுமே தொலைநிலை படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் ரஜனீஷ் ஜெயின் கூறுகையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரம் பெறாமல், தொலைநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது.
இது, தொலைநிலைப் படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். எந்த உயர் கல்வி நிறுவனமும் அங்கீகாரம் பெறாமல் தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது” என்றார்.

