Theme Check

காந்தி படம் பொறித்த நாணயத்தை வெளியிடும் இங்கிலாந்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி !

காந்தி படம் பொறித்த நாணயத்தை வெளியிடும் இங்கிலாந்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி !

காந்தி படம் பொறித்த நாணயத்தை வெளியிடும் இங்கிலாந்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி !
X

காந்தியின் உருவப்படம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்து விளங்கிய தலைவர்களின் படங்களை இங்கிலாந்து அரசு நாணயமாக வெளியிட்டு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி அன்று இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு இந்தியர்களை உற்சாகப்படுத்தியது. அதாவது இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் படத்தை நாணயத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளதே இதற்கு காரணம்.

Gandhi_Coin

காந்தியின் உருவம் ஒரு பக்கம், நாணயத்தின் பின் பகுதியில் இந்தியாவின் தேசிய மலரான தாமரை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாணயம் பொது புழக்க நாணயமாக இல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வெளியிடப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


newstm.in

Tags:
Next Story
Share it